ஈழத்து பழநி என அழைக்கப்படும் கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்திற்குச் செல்ல
10லட்சருபா பெறுமதியான படகுப் பாதை வழங்கி வைக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சர்வாவின் வழிகாட்டலில் முன்நாள் உறுப்பினர்களான கே. துரைரெத்தினம், எஸ்.திருநாவுக்கரசு ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ் இதனை ஆலயத்திற்கு வழங்கி வைத்தார்.
வேலோடுமலை முருகன் ஆலயத்திற்குச் செல்வதானால் சித்தாண்டி சந்தனமடு ஆற்றினை கடக்க வேண்டும். இதுவரை காலமும் பாதுகாப்பற்ற முறையில் வள்ளல்களில் மக்கள் பயத்துடன் பயணித்து வந்தனர்.
அக் குறையை ஏறாவூர் பிரதேச சபை தீர்த்து வைத்துள்ளது.
அப் படகுப் பாதை கையளிக்கும் வைபவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்தனமடு ஆற்றில் இடம்பெற்றது.
வைபவத்தில் சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலய தலைவர் .சு.தியாகராசாவிடம் இப் படகுப் பாதை ஒப்படைக்கப்பட்டது.
ஏறாவூர் பிரதேச சபையின் ஆன்மீகப் பணியை பலரும் பாராட்டினர்.
எதிர்வரும் 30ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment