இன்று கொக்கட்டிச்சோலையில் 108 சிவலிங்கங்களுடன் திருமந்திர அரண்மனை கும்பாபிஷேகம்.



வி.ரி. சகாதேவராஜா-
ழத்தில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் பிரமாண்டமான கட்டிட அமைப்புடன் 108 சிவலிங்கங்களும் 3000 ம் திருமந்திரப் பாடல்களுடனான திருமந்திர அரண்மனை இன்று 24 ம் திகதி கும்பாவிஷேகம் காணவிருக்கிறது.

நேற்று வியாழக்கிழமை எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் இடம் பெற்றது.

சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரிய சைவப்பணியை கிழக்கிலங்கையிலும் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனார்.

வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று இன்று கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை திறப்பது சிறப்பிற்குரியது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் அமையப்பெற்ற கருங்கற்கோயில் முகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு திருக்குடமுழுக்கும் அதனோடு இணைந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களும் கருங்கற்களில் பொறிக்கப்பெற்ற சிவபூமி திருமந்திர அரண்மனை திறப்பு விழாவும் இன்று 24.03.2023 வெள்ளிக்கிழமை பக்தி பூர்வமாக நிகழவுள்ளது. பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :