கொழும்பு 12 அல்-ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் 38வது வருட பரிசளிப்பு விழாவும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஹதிய்யா பாடசாலையின் அதிபர் பாஹிம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தெஹிவல ஜூம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் இஸ்மாயில் ஹாஜியும் கௌரவ அதிதியாக மத்திய அஹதிய்யா சம்மேளனத் தலைவர் ஸறூக் ஹாஜியார் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது விசேட பேச்சாளராக கொழும்பு மாவட்ட அஹதிய்ய சம்மேளனத்தின் செயலாளர் முஹமட் பக்கீருத்தீன் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் மேடை நிகழ்வுகளும் அதிதிகளின் உரைகளும் இடம் பெற்றது. மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்ளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

0 comments :
Post a Comment