20 லட்சம் ருபாய் கடனோடு பொறுப்பேற்று இன்று 48 லட்சம் ரூபாயை மேலதிகமாக விட்டு செல்கிறோம். இறுதி சபை அமர்வில் தவிசாளர் ஜெயசிறில் உரை.



வி.ரி. சகாதேவராஜா-
லங்கையில் மாகாண சபைகள் ஏழு வருடங்களாக தேர்தல் இல்லாமல் உறங்கு நிலையில் இருக்கின்றன. எனவே இன்றைய உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் இறுதி விசேட அமர்வில் உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .

சபையின் இறுதி விசேட அமர்வு நேற்று (17) வெள்ளிக்கிழமை சபா மண்டபத்தில் நடைபெற்றது .

அங்கு தவிசாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசுகையில்...

இலங்கையில் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது யாருக்கும் தெரியாது அப்படியான இக்கட்டான நிலைக்கு வேட்பாளர்களும் பொதுமக்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்தல்கள் எல்லாம் நடத்தப்படுகிற பொழுது தான் மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படும்.

13 ,சமஸ்டி என்ற கோஷங்களோடு தமிழ் பேசும் மக்கள் கடந்த பல தசாப்த காலமாக கோரிக்கை விடுத்து போராடி வருகின்றார்கள் .
இந்த நிலையில் மாகாண சபைக்கு திண்டாடுகின்ற ஒரு துரதிஸ்டவசமான நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையிலே வருமானம் குறைந்த சபைகளிலேயே ஒன்றாக காரைதீவு பிரதேச சபை இருக்கிறது.
5 வருடங்களுக்கு முன்பு நாம் இச் சபையை பாரம் எடுக்கின்ற பொழுது 20 லட்ச ரூபாய் கடனில் இருந்தது. அந்த கணத்திலிருந்து ஊழல் அற்ற நேர்மையான ஆட்சி செய்து இன்று 48 லட்ச ரூபாயை மேலதிகமான வைப்பாக சபையிலே விட்டுவிட்டு செல்கின்றோம். அதற்காக ஒத்துழைத்த உறுப்பினர்கள் ஊழியர்கள் ஆலோசனை சபையினர் அனைவருக்கும் இந்த இடத்திலேயே நன்றிகள் தெரிவிக்கின்றேன்.

எப்படி எங்களுக்குள் நாங்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் இதுவரை ஐந்து வருட காலமும் எனது வரவு செலவு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி தமிழ் முஸ்லிம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி மக்களுக்கு தேவையான சேவைகளை அவ்வப்போது மறக்காமல் தார்மீகத்தோடு செய்து வந்திருக்கின்றோம். இதற்கு அனைவரும் சாட்சி.
ஏனைய சில சபைகளில் கோடிக்கணக்கில் ஊழல் மோசடி நடப்பது போல எமது சபையில் இல்லை. எந்த விதமான குற்றச்சாட்டு இன்றி ஊழல் மோசடி இன்றி நீதியான ஒரு நிர்வாகத்தை கடந்த5 வருடமும் தொடர்ச்சியாக தவிசாளராக இருந்து செய்யக்கூடிய ஒரு வல்லமையை இறைவன் தந்திருக்கின்றான். பொதுமக்கள் தந்து இருந்தார்கள் நன்றிகள். அப்படி சேவை செய்துள்ளோம்.
இந்த இறுதி அமர்வில் உபதவிசாளர் ஏ எம். ஜாகீர், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்எச்எம் இஸ்மாயில், தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான எஸ்.நேசராஜா,சி. ஜெயராணி ,சுயேச்சைக்குழு உறுப்பினர் எஸ். சசிகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். றனீஸ் ஆகிய ஆறு உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்களும் தனது நன்றி உரைகளை ஆற்றியிருந்தார்கள்.
சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் உடனிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :