ஏறாவூர் மட்/மம/அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையின் 2023 மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் அதிபர் UL.இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் SMM அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான MJF றிப்கா MHM றமீஸ், VTM அஜ்மீர்,ஜனாபா j தாஜூன் நிசா ,விஷேட அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர்களான AM முபாஸ்தீன் முதர்ரிஸ் MHM நஸீர் ஆசிரிய ஆலோசகர் HMA மாஜித் ,சிறு விளையாட்டு இணைப்பாளர் ML இனாமுல்லாஹ் அவர்களும் அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர்களான அல்ஹாஜ் UL ஆதம்லெப்பை,A,நூர் முகம்மது ,MS அபுல் ஹஸன், AMA ஜுனைத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி,அணிநடை,உட்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெருமளவு சிறப்பாக அமைந்திருந்தன.
இவ் விளையாட்டுப் போட்டியின் மொத்த ப் புள்ளிகளின்னடிப்படையில் ஹிறா இல்லம் முதலாமிடத்தையும்,சபா இல்லம் இரண்டாமிடத்தையும்,மர்வா இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றன.
0 comments :
Post a Comment