மொறட்டுவையில் கற்று கனடாவில் வாழ்வோர் காயத்ரி கிராமத்தில் 25வீடுகள் அமைக்க ஏற்பாடு!



வி.ரி. சகாதேவராஜா-
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் 1989/1990 காலப்பகுதியில் கல்வி கற்று தற்போது கனடா மற்றும் இலங்கையில் வசிக்கும் நிதி வழங்குனர்கள் இணைந்து திருக்கோவில் -4 காயத்திரி கிராமத்தில் வீடற்ற 25 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து வழங்கவுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக 5 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்
நேற்று முன்தினம் (24) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இவ் வீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக கிடைக்கப்பெற்றன .

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் , கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கந்தசாமி, நிதி வழங்குனர் சார்பில் திருமதி சுபாசினி கிரிதரன், சி.நந்தகுமார் , திருக்கோவில்-4 கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பயனாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இவ் வீடுகள் அமைப்பதற்காக பிரதேச செயலகத்தால் காணிகள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :