செல்வச்சந்நிதி கதிர்காம பாதயாத்திரை மே 27 இல் ஆரம்பம்! பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவிப்பு.



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி கதிர்காமம் நீண்ட பாதயாத்திரை எதிர்வரும் மே மாதம் 27ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது என்று பாதயாத்திரை குழுவின் தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவித்தார்.

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 22-வது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது . இம்முறை பாத யாத்திரையில் கலந்து கொள்வோர் கட்டாயம் சமய ஆசார முறைப்படி கலந்து கொள்ள வேண்டும் .
21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வேஷ்டியோடும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காவி சாறியுடனும் கலந்து கொள்ள வேண்டும். செல்லும் வழியில் உள்ள ஆலயங்களில் பஜனை மற்றும் சிரமதானத்தில் பங்கு கொள்ள வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் யாராவது சமய ஆசார முறைக்கு மாறான நடத்தையில் ஈடுபட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவார்கள் என்று ஜெயாவேல்சாமி மேலும் தெரிவித்தார்.

55நாள் நீண்ட இப் பாதயாத்திரையில் பங்கு பற்ற விரும்பும் அடியார்கள் அல்லது உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் 0778386381 அல்லது 0763084791 அல்லது 0776139932 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப் பட்டுள்ளார்கள்.

இம்முறை கதிர்காமம் கந்தன் ஆலய ஆடி வேல்விழா உற்சவம்
பெரும்பாலும் ஜூலை மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :