வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலய அஷ்டோத்திர மகா சங்காபிஷேகம் எதிர்வரும் 27ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது.
ஆலய குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா இதனை ஆலய நிர்வாக சபை கூட்டத்தில் தெரிவித்தார் .
ஆலய நிர்வாக சபைக் கூட்டம் ஆலய பரிபாலனசபைத் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் நேற்று முன் தினம் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது .
அங்கு ஆலய குரு கோவர்த்தன சர்மா சங்காபிஷேகம் தொடர்பான பூரண விளக்கங்களை பரிபாலன சபையினருக்கு தெரியப்படுத்தினார்.
ஆலய பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பரிபாலன சபையினர் கலந்து கொண்டார்கள் .
சங்கிபிஷேகம் 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறும். அதற்கு முன்னதாக 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாஸ்தூசாந்தி பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் மாலை 7 மணி வரைக்கும் இடம்பெறும் .
சங்காபிஷேகத்தை தொடர்ந்து ஆலய வருடாந்த திருவிழா சித்ரா பௌர்ணமிக்கு முன்னதாக உள்ள ஒன்பது நாட்களும் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment