இன்று 3 மாவட்டங்களில் 5நாட்கள் சர்வதேச பெண்கள் தினம் ஆரம்பம். மனித அபிவிருத்தி தாபனம் ஏற்பாடு.



வி.ரி.சகாதேவராஜா-
னித அபிவிருத்தி தாபனம் உலகளாவிய ரீதியிலான 2023இற்கான சர்வதேச பெண்கள் தினத்திற்கான நிகழ்வுகளை இன்று (8) புதன்கிழமை ஆரம்பித்தது.

இவ்வகையில் இலங்கையில் அரச நிர்வாக துறையிலும் தனியார் துறையிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பல்வேறு செயற்பாடுகளை நடாத்தி வருகின்றது.
மனித அபிவிருத்தி தாபனம் தனது இலக்கு பிரதேசத்தில்
பெண்களும்,வேளாண்மையியல் என்ற மகுடத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, அம்பாறை, மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் தோட்டங்களில் 05 நாட்களுக்கு தொடர்ச்சியாக பல விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்திருந்தது..

கண்டி மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு கலஹா பிரதேசத்திலும்,
நுவரெலியா மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு கொட்டகலை
பிரதேசத்திலும், அம்பாறை மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு காரைதீவு
பிரதேசத்திலும்  இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் கிரேட்வெளி,பட்டவீர,பட்டியகம,கல்லுமலை,புதுகாடு ஆகிய இடங்களிலும் நுவரெலியா மாவட்டத்தில் ரஹத்துங்கொட, முல்லோயா,ஹோப், அப்பகோனாவ, வல்லோயா லூல்கந்துர,யதன்சயிட்,ஹெரிங்டன் ஆகிய இடங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, வளத்தாப்பிட்டி. நற்பட்டிமுனை ஆகிய இடங்களிலும் இவ் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வாக எதிர்வரும் 12ம் திகதி "சூம்" தொழினுட்பத்தினூடாக மேற்குறிப்பிட்ட தோட்டங்கள் கிராம பகுதிகளில் இருந்து பலர் பங்குபற்ற உள்ளனர்.இந் நிகழ்வு தாபனத்தின் இயக்குனர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பாளர் பி. சிறிகாந்த் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :