நள்ளிரவில் 350நெல்மூடைகளை துவம்சம் செய்த 60 காட்டு யானைகள்! காரைதீவில் சம்பவம்.!



வி.ரி. சகாதேவராஜா-
ள்ளிரவில் வயலுக்குள் இறங்கிய சுமார் 60 காட்டு யானைகள் 350 நெல்மூடைகளை துவம்சம் செய்துள்ளன.

இச்சம்பவம் காரைதீவில் (10) வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேசத்திலமைந்துள்ள வளைந்தவட்டை மேல்கண்டத்திலுள்ள விஷ்ணு கோயிலுக்கு சொந்தமான 09 ஏக்கர் காணி உள்ளிட்ட 13 ஏக்கரில் விளைந்த நெல் அறுவடை செய்யப்பட்டு மூட்டைகளில் வாகனத்தில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், கமநல உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு முறையிடப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் காலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு நடந்தவற்றை விசாரித்தார்.

அறுவடை நடைபெறும் வேளையில் வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி விவசாயிகளுக்கு உதவவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :