அதிக புள்ளிகளைப் பெற்ற மற்றும் தகுதியுடைய மாணவர்களைப் பாராட்டி விருது வழங்கும் விழாவும், சர்வதேச மகளிர் தின விழாவும் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.முஹம்மட் அன்சார் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (09) நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், மற்றும் இலங்கை முஸ்லிம் பெண்கள் வரலாற்றில் முதற் பெண் நீதிபதியுமான ஓய்வு பெற்ற நீதிபதி மைமுனா அஹமட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன், கல்முனை வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர் வை. ஹபிபுல்லா, மாவட்ட பொறியியலாளர் ஏம். சாஹீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.எம். அப்துல் மலீக், நிந்தவூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸடீன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் என்.எம். மாஜிதா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், கல்முனை வலயக் கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் ஏ. சஹரூன், சறோ பாம் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். தாஜுடீன், கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவு பிரிவின் மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீன் ஆகியோர் விஷேட அழைப்பாளராகவும் கலந்து சிறப்பித்தனர்.
வெட்டுப்புள்ளிகளுக்கு மேற்பட்ட இரு மாணவர்களுக்கும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 21 மாணவ மாணவிகளும் கெளரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
அங்கு உரை நிகழ்த்திய பிரதம அதிதிகளில் ஒருவரான கல்முனை வலயக் கல்வி பணிப்பாளார் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் சூழலில், சமூக மட்டத்தில், கல்வி, சமூக, சமய, பொருளாதார, அரசியல் என்று எல்லாத் துறைகளிலும் பெண்களின் வகிபாகம் அதிகரித்து வருகின்றமையை
நாம் ஆய்வின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. எனவே நாம் பெண்களுக்குரிய உரிமையையும் மதிப்பையும் நாம் வழங்குவதோடு பெண்களுக்கெதிராக நடக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலைகளின் முன்னேற்றங்களையும், அபிவிருத்திகளையும், மதிப்பீடு செய்வதற்காக வருடாந்தம் வலயக் கல்வி அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் வலய மட்ட மேற்பார்வையில் கல்முனை வலயத்திலுள்ள தேசிய பாடசாலைகள், மத்திய கல்லூரிகளென 65 பாடசாலைகளுள் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம் 85வீத அதி கூடிய புள்ளிகளைக் பெற்று முதற் தடவையாக "வலயத்தில் முதலாம் தரப் பாடசாலையாக" முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி, உதவி, அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் நலன் விரும்பிகள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment