விழிப்புலனற்றோர் ஒலிப்பந்து கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணி வெற்றி.



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண பிரிலியண்ட் மற்றும் கொழும்பு றத்மலான விழிப்புலனற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒலிப்பந்து கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணி வெற்றி பெற்றது.

மட்டக்களப்பு சிவாநந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இப் போட்டி இடம் பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி கிழக்கு மாகாண அணியை துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிழக்கு மாகாண அணி 15 ஓவர்கள் நிறைவில் 94 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுக்களை இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 14.2 ஓவர்களில் 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்டநாயகனாக கொழும்பு அணி தலைவர் திமுத்த பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பொதுச்சபை ஆணைக்குழு செயலாளர் கலாநிதி எம்.க கோபாலரத்தினம்
சிறப்பு விருந்தினராக மன்முணை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்..







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :