கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் திருகோணமலை வரோதயநகர் அரச வளாகத்தில் நேற்று (08) மாலை 3 மணிக்கு உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழா மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க கலந்து கொண்டு இதனை உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டார்.விளையாட்டில் ஈடுபடும் வீர வீராங்கனைகளின் திறனை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை பேணவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் பலர் நன்மையடைவர்கள்
இதில் கௌரவ அதிதிகளாக -கிழக்கு மாகாண செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment