கல்முனை மாநகர முதல்வரை ஊழலுடன் தொடர்புபடுத்தி பொது வெளியில் மானவங்கப்படுத்தியதாக தெரிவித்து கல்முனை மாநகர ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் தொடர்ந்தும் எழுதிவரும் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜி என அறியப்படும் அச்சு முஹம்மது முஹம்மது நசீர் மற்றும் மருதமுனையை சேர்ந்த சமூக செயற்பாட்டளர் செய்னூலாப்தீன் நௌஷாட் ஆகியோருக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் சார்பில் மான நஷ்ட இழப்பீட்டு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் சார்பில் சட்டத்தரணி சீ.ஐ. சஞ்சித் அஹமட் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் என்னுடைய கட்சிக்காரரான அபூபக்கர் முஹம்மது றகிப், ஓர் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் , பிரசித்த நொத்தாரிசாகவும் , உத்தியோகபற்றற்ற நீதவானும், சமாதான நீதிபதியாகவும், இருப்பதுடன் கல்முனை மாநகர முதல்வராகவும் பணியாற்றி வருகிறார் . அத்தோடு பல சமூக நிறுவனங்களில் முக்கிய பதவிகள் வகித்து வருகின்றார் . மருதமுனையின் கீர்த்தி மிக்க குடும்பத்தில் பிறந்து, மருதமுனையிலும், இப்பிராந்தியத்திலும் பிரிசித்தி பெற்று விளங்குகிறார் .
உம்மால் கடந்த 28.02.2023 ம் திகதி அல்லது அதற்கு முன் பின்னரான தினத்தில் நஸீர் முஹம்மட் என்ற உமது முகநூல் பக்கத்திலும், 03.03.2023 ம் திகதி அன்று எழுதப்பட்டு அச்சடிக்கப்பட்டு பகிரங்க இடமான மருதமுனை . கல்முனை பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்பட்ட “ கல்முனை வாழ் நகர் மக்களே நாம் எப்போது விழிப்பது ? கண்கெட்ட பின்தான் சூரிய நமஸ்காரமா ? வெட்கம் , அவமானம் கோடிகளில் ஊழல், கொள்ளை, ஏன் இன்னும் உறக்கம்? எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் பின்வருமாறு கூறியுள்ளீர் , மேற்குறித்த விடயத்தை 07.03.2023 ம் திகதி அன்று “ தாறுஸ் ஸபா " என்ற முகநூல் ஊடகத்தில் அளித்த செவ்வியில் உறுதிப்படுத்தி உள்ளீர் .
இரண்டு கோடி ரூபா வரை களவு பிடிபட்டுள்ளது. இது வரை 2300 பற்றுச்சீட்டுக்களில் திருட்டு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . களவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மேயர் முகநூலிலும் , பத்திரிகைகளிலும் , குளுரைக்கிறார் அவர் செய்த ஊழல்களுக்கு யார் சூளுரைப்பது வேலியே பயிரை மேயுது " என்றும், " உங்களது அலுவலகப் பாவனைக்காக அரசால் வழங்கப்பட்ட PE - 8361 ம் இலக்க பிக்அப் வாகனத்தின் அனுமதி அற்ற சட்டவிரோத பாவனை . அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக எரிபொருளைப் பாவித்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியது . அந்த களவை மறைக்க 2018 முதல் 31.12.2020 வரை றணிங்சாட் இல்லாமல் வாகனத்தை பாவித்தது " என்றும், " 15.02.2022 ம் திகதி நெஸ்லே கம்பணியால் விற்பனை அபிவிருத்திக்காக செலுத்தப்பட்ட 270,000.00 ரூபாவை யாருடைய மடுவில் போட்டுள்ளீர்கள் " என்றும் ,
கல்முனையில் உள்ள அரசு , தனியார் வங்கிகள் கண்முன்ன மாநகர் எல்லைக்குள் போடும் விளம்பரப் பதாதைகளுக்காக அறவிடப்படும் பணம் யாருடைய மடுலில் போட்டுள்ளீர்கள் ", “ கேபீல்டிபி எனும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் பணம் யாருடைய மடுவில் போட்டுள்ளீ ர்கள் என்றும், நபா கோல்டிங் என்ற கள்ளப்பெயரில் போலியான வியாபாரப் பதியின் மூலம் இல்லாத கடையின் பெயரில் மாநகர சபைக்கு மின்குமிழ் வழங்கிய கொள்ளையை யார் விசாரணை செய்வது என்றும், கல்முனை மாநகர சபையை ஈமான் இல்லாத ஷைத்தானின் கையில் மக்கள் ஆணையாக வழங்கப்பட்டு பொலிவிழந்து கிடக்கின்றது என்றும் , முஸ்லிங்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டி வெற்றிபெற்று ஓர் நித்திய வெறியனை மேயராக்கிய முஸ்லிம் கட்சியால் கல்முனை மாநகரம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு எனது கட்சிக்காரரை திருடன் எனவும் , கொள்ளைக்காரன் எனவும் , குடிகாரன் எனவும் . சாத்தான் எனவும் , ஈமான் இல்லாதவன் எனவும் கடுமையான வசைச் சொற்களை பாவித்து அவர் இதுவரை கட்டிக்காத்து வந்ததும் சமூகத்தில் அவருக்கு இருந்த புகழ் , கீர்த்தி , நற்பெயர் , பிரசித்தம் என்பளவற்றிக்கு களங்கம் விளைவித்துள்ளீர் . இதன் மூலமாக எனது கட்சிக்காரர் உளரீதியாகவும் , உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் . இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 300 மில்லியன்கள் என அவர் கணிப்பீடு செய்துள்ளார் . எனவே மேற்குறித்த இழப்பீட்டினை இக்கடிதத்திகதியிலிருந்து இரண்டு கிழமைகளுக்குள் என்னுடைய கட்சிக்காரரிடமோ அல்லது என்னிடமோ செலுத்த வேண்டுமென இந்தால் கோரிக்கை விடுக்கின்றேன். தவறின் இனி உமக்கு எவ்வித அறிவித்தலுமின்றி தகுதிவாய்ந்த நீதிமன்றில் வழக்கிடவும் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் .என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற மற்றுமொரு கடிதம் மருதமுனையை சேர்ந்த சமூக செயற்பாட்டளர் செய்னூலாப்தீன் நௌஷாட் என்பவருக்கு அதே சட்டத்தரணி மான நஷ்ட இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 02/03/2023 ம் திகதி அன்று உமது முநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் பின்வருமாறு கூறியுள்ளீர் , “ நிதி மோசடியுடன் நேரடி தொடர்புடைய மேயர் பதவி விலக வேண்டும் இவ்வாறு எனது கட்சிக்காரரை திருடன் எனவும் , கொள்ளைக்காரன் எனவும் கடுமையான சொற்களை பாவித்து அவர் இதுவரை கட்டிக்காத்து வந்ததும் சமூகத்தில் அவருக்கு இருந்த புகழ் தீரத்தி , நற்பெயர் , பிரசித்தம் என்பவைற்றிக்கு களங்கம் விளைவித்துள்ளதோடு மாநகர மக்களையும் பிழையாக வழிநடாத்தியுள்ளீர் . இதன் மூலமாக எனது கட்சிக்காரர் மனரீதியாகவும் . உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் . இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 100 மில்லியன்கள் என அவர் கணிப்பீடு செய்துள்ளார் . எனவே இந்த இழப்பீட்டினை இக்கடிதத்திகதியிலிருந்து இரண்டு கிழமைகளுக்குள் என்னுடைய கட்சிக்காரரிடமோ அல்லது என்னிடமோ செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் விடுத்துள்ளதுடன் தவறின் இனி உமக்கு எவ்வித அறிவித்தலுமின்றி தகுதிவாய்ந்த நீதிமன்றில் வழக்கிடப்படும் எனவும் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜி மற்றும் மருதமுனையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் செய்னூலாப்தீன் நௌஷாட் ஆகியோர், இந்த சலசலப்புக்களுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் உயிருள்ளவரை இலஞ்சம், ஊழல், அதிகார மோசடிக்கு எதிராக போராடுவோம் என்றும். இந்த கோரிக்கை கடிதத்தை பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை என்றும். எங்களை போன்று ஊழலுக்கும், அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் எதிராக பேசுவோரை அச்சுறுத்துவதும், அவர்களை மிரட்டுவதும் அவரது வழமை. நாங்கள் மக்களின் சொத்தை பாதுகாக்க எதுவித நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாரெனவும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment