இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.மலிக் அவர்கள் கலந்துகொண்டு காத்திரமான கருத்துக்களை முன்வைத்தார்.
இதன்போது சாய்ந்தமருதில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ,பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் PAST PUPILS’ ASSOCIATION அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டு தாங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
கடந்த 2004 ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரலைகளின் காரணமாக முற்றாக சேதமடைந்து பின்னர் முழுமையாக புனரமைக்காப்பட்ட, குறித்த சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் குவிந்துள்ள வளங்களை பாடசாலைச் சூழலில் இருக்கின்ற மாணவர்கள் அனுபவித்து, கடந்தகாலங்களில் இங்கு கல்விகற்று பல மாணவர்கள் உயர்நிலைகளை அடைந்தது போன்று சிறந்த கல்விச் சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில்; இந்தப் பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்களைக் கொண்ட “PAST PUPILS’ ASSOCIATION” எனும் அமைப்பு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் கற்ற மாணவர்களைக் கொண்ட குறித்த அமைப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் மாணவர்களின் உந்துதலில், பல்வேறு சந்திப்புக்களையும் ஒன்றுகூடல்களையும் நடாத்தி வருகின்றது.
பாடசாலைக்கு இன்னும் வலுவூட்டி, கடந்தகாலங்களில் இப்பாடசாலையிலிருந்து சக்திவாய்ந்த தலைவர்கள் உருவானது போன்று எதிர்காலத்திலும் சிறந்தவர்களை உருவாக்கி நல்ல கற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கும் அமைப்பின் உயரிய நோக்கத்தின் கீழ் இவ்வாறான சந்திப்புக்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment