*பண்டாரவளை, மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் – ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு*



ண்டாரவளை, பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பின்னர், பதுளை பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கபரகல தோட்டமும் மண்சரிவு அபாய வலயத்தில் இருந்தது. எனவே, அம்மக்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்குமாறும், வீடுகளை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கி தருமாறும் நாம் தோட்ட நிர்வாகத்திடம் கோரியிருந்தோம்.

எனினும், தோட்ட நிர்வாகம் காணி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொடர்பிலும் அசமந்தமாக செயற்பட்டுள்ளது. எனவே, அரச நிர்வாக பொறிமுறை உரிய முன்னேற்பாடுகளை கோரியும், அதனை வழங்க நடவடிக்கை எடுக்காத தோட்ட நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும்." - என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :