இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசனை உணவுத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம் பீ ஏ வாஜித், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என் ரமேஷ் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
தாய் சேய் நலப்பிரிவின் மேற்பார்வையின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் இது தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment