நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



நூருள் ஹுதா உமர்-
நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

சபையின் வழமையான நடடிக்கைகளை தொடர்ந்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து அப்பிரதேச வாசிகள் தனக்கு மகஜர் ஒன்றை கையளித்ததாகவும், குறித்த கடலரிப்பிற்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியதாகவும் தவிசாளர் பிரேரனையொன்றை முன் வைத்திருந்தார். அதன் பிரகாரம் ஒலுவில் துறைமுகத்திலுள்ள பாராங்கற்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் முதற்கட்டமாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு பிரதேச சபையினால் 500,000/- ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த சபை அமர்வானது இறுதி அமர்வென்பதினால் சபையின் உறுப்பினர்களின் பிரியாவிடை உரை நிகழ்த்தியிருந்தனர். கடந்த காலங்களில் தவிசாளரின் வழிகாட்டலில் இச்சபை சிறப்பாக வழிநடாத்தப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமையை சகல உறுப்பினர்களும் மேற்கோள் காட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சபையினுடைய செயற்பாடுகள் அனைத்தும் ஊரின் நன்மை கருதியே அமைந்திருந்தது. எந்தவொரு கட்சியை பிரதிபலிக்கும் செயற்பாடுகளாகவோ அல்லது கட்சியின் ஆதரவாளர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாகவோ அமைந்திருக்கவில்லை. ஊரின் நலனில் அக்கறை கொண்டு மூன்று கட்சி உறுப்பினர்களும் வழங்கிய ஒத்துளைப்பினால் தான் நிந்தவூர் பிரதேச சபை முதல் நிலை வகிக்கின்றது என தவிசாளர் தாஹிர் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :