தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புனித நோன்பை முன்னிட்டு உணவு பாதுகாப்பு திட்டம் எனும் கருப்பொருளில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து (23) வழங்கி வைக்கப்பட்டன.
தலா 7000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் இத் திட்டம் கிண்ணியா,மூதூர் பிரதேச செயலகப் பகுதிகளிலும் மொத்தமாக 765 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ .முஜீப், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நிஹாத் மற்றும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இணைப்பாளர் ரமீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment