அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிந்தனையின் பிரகாரம் நாட்டில் பெரும்போகத்தில் விளைந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து அதை சிறிய நடுத்தர அரிசி ஆலைகளில் அரிசி பொதிசெய்து நாட்டிலுள்ள சுமார் 20 லட்சம் குடும்பங்களுக்கு மார்ச்,ஏப்ரல் மாதங்களில் குடும்பத்துக்கு 10 கிலோ வீதம் இலவசமாக அரிசி விநியோகிக்கப்படும் நிகழ்வு தேசிய வைபவமாக இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவிற்கான பிரதான நிகழ்வு ஐயங்கேனி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தர் MMA. ஷாபி தலைமையில் ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிகாரா மௌஜூத் மற்றும் உதவி திட்ட பணிப்பாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொன்டனர்.
0 comments :
Post a Comment