மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் சென்று நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இந்த அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதாக இல்லை எனவும்,அரசாங்கம் திருடர்களுடன் டீல் போட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தி என்பது திருடர்களுடன் டீல் போடும் கட்சியல்ல எனவும்,மக்களுடன் மட்டுமே டீல் போடும் அரசியல் கட்சியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கூறுவது போல் போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் ஜனாதிபதி,தடியடி கண்ணீர் புகை பிரயோகங்களால் மட்டுமே பதில் வழங்குவார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த கோழைத்தனமான அரசாங்கத்திற்கு எதிராக மௌனமாக இருப்பதா அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் வீதியில் இறங்கி இந்த முட்டாள்தனமான அரசாங்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவதா என மக்களிடம் கேட்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வட்டார மட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment