சிங்கள மொழியியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்த முதலாவது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்



அஸ்ஹர் இப்ராஹிம்-
ளனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ஹமீது நாஸிக் அஹ்மத் ஆசிரியர் சிங்கள மொழியியல் துறையில் சிங்கள மொழி மூலத்தினூடான முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற களனி பல்கலைக்கழகத்தின் 132 வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் இவர் சிங்கள மொழியியல் துறைக்கான முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் சிறுவயதிலிருந்தே சிங்கள மொழியைக் கற்பதில் காட்டிய அதீத ஆர்வமே சிங்கள மொழியை ஆழமாகக் கற்று முதுமாணிப்பட்டம் வரை செல்ல வாய்ப்பேற்படுத்தியது.

இவர், 2017 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையின் இரண்டாம் மொழி சிங்கள பாடத்திற்கான ஆசிரியராக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினூடாக தெரிவு செய்யப்பட்டு, அக்கரைப்பற்று வலயத்தின் பொத்துவில், அல்-கலாம் மகா வித்தியாலயத்தில் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் சிங்களப் பாடத்திற்கான ஆசிரியராக சேவையாற்றி பின்னர், இடமாற்றம் பெற்று தற்போது, சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) சிங்களப் பாடத்திற்கான ஆசிரியராக சேவையாற்றுகின்றார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பகுதி நேர சிங்கள பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும்,

மகரகம கல்வி நிறுவகத்தின் தேசிய வளவாளராகவும், வருகைதரு விரிவுரையாளராகவும் சேவையாற்றுவதோடு,

அரச கரும மொழிகள் திணைக்களத்தினதும் ,தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினதும் அரச ஊழியர்களுக்கான அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான 100, 150 மற்றும் 200 மணித்தியாலங்களைக் கொண்ட பாடநெறிகளுக்கான தேசிய வளவாளராகவும்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இடம் பெறுகின்ற பகுதி நேர சிங்கள சான்றிதழ் பாடநெறிக்கான வருகைதரு போதனாசிரியராகவும்,

சாய்ந்தமருது பொலிவேரியனில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தின் பகுதி நேர சிங்கள மொழிக்கான வருகைதரு போதனாசிரியராகவும் சேவையாற்றுகின்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :