புதுமைப் பெண் , திட்டத்தின் கீழ் இதுவரை 15,000 பெண்கள் தாம் செய்யும் சுயதொழில் முயற்சியில் டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல நமது குடும்பத்தின் வருமானத்திற்கும் சொந்தக் காலில் நின்று வருமானம் பெருகின்றனர் என இராஜாங்க அமைச்சர் கனக்க கேரத் தெரிவித்தார்.
.
மேற்கண்டவாறு புதன்கிழமை (15) பி.எம்.ஜ.சி.எச்சில் இலங்கையில் உள்ள 24 மாவட்டங்களிலும் மகளிர் விவகார அமைச்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கைத்தொழில் முயற்சியாளர்கள் திட்டத்தின் கீழ் ”புதுமைப் பெண்” விருது வழங்கும வைபவம் நடைபெற்றது..
இந் நிகழ்வுக்கு தொழில்நுட்ப தகவல் துறை இராஜாங்க அமைச்சர் கனக கேரத், மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இ்ராஜாங்க அமைச்சர் கீத்தா குமாரசிங்கவின் அதிதிகளாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனா் அத்துடன் அமைச்சின் அதிகாரிகளும் இத்திட்டத்தினை இரண்டு அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுத்து நிறுவனங்கள் அதிகாரிகளும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தொடா்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமை்சசர் கனக்க கேரத்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெண்கள் உதவி வருகிறார்கள். இப் பெண்களது உற்பத்திகள் வெளிநாட்டவர்களும் கொள்முதல் செய்வதற்கு டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பெண்கள் தமது உற்பத்திகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக சந்தைப்படுத்தல் முறையைில் நமது வீடுகளில் இருந்தவாரே இத் தொழில்களை செய்துவருகின்றனா். இப் பெண்களுக்கு கனனி முறையில் பெற்ற பயிற்சியின் ஊடகாவே உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் தமது உற்பத்திகளை பொதி செய்து ஒன்லைன் ஊடகா தபால் மூலம் பொதிகளை அனுப்புகின்றனர். இத்துறையில் இவா்கள் கைத்தொழில் கொண்ட வல்லுணர்களாகவும் விளங்கி வருகின்றனதையிட்டு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். என தொழில்நுட்ப தகவல் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் கனக கேரத் தெரிவித்தார்
வவனியாவினைச் சேர்ந்த நிசாந்தன் சோபனா இங்கு கருத்து தெரிவிக்கையில் நான் இத்துறையில் வவுனியாவில் உள்ள பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உதவுியுடன் டிஜிட்டல் முறைமை மற்றும் சமுகவலைத்தளங்கள் ஊடாக பயிற்சியைப் பெற்றேன். எனது உற்பத்தியானது வாழை மரத்தின் நார்களை வாங்கி அதனை பதனிட்டு மேசையின் மேல்போடும் துண்டு, நாரினால் இறைக்கப்பட்ட செருப்பு , பாய், தட்டு போன்ற பல் உற்பத்திகளை செய்து அதனை விற்பனை செய்து வருகின்றேன். என்னிடம் 10 விதவைப் பெண்கள் அவர்களது உற்பத்திகளை வாங்கி உள்ளுாரிலும் வெளி ஊர்களிலும் விற்பனை செய்து வருகின்றேன். வீட்டில் இருந்தவாரே எனக்கு 30 ஆயிரம் மாதாந்தம் உழைக்க முடியும். எனக் கூறினார் எனது முகநுால் ஊடாக தொடா்பு கொண்டு பரர்சல்பன்றி விமானதபால் மூலம் இப்பொருட்களை அனுப்பி வைப்பேன் எனவும் சோபனா தெரிவித்தார்
மகளிர் சிறுவர் விவகார அமைச்சும் தொழில்நுட்பம் தகவல் சம்பந்தான அமைச்சும் இணைந்து ஜக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள மெட்டா, ஜசீரீ(இக்டா) ஆகிய நிறுவனங்களின் உதபியுடக் இலங்கையின் 24 மாவட்டங்களிலும் பென் தொழில் முயற்சி திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் (சுகுரலிய) எனும் திட்டத்தினை 2017ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தது.
0 comments :
Post a Comment