சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக போதைவஸ்த்து பாவனை ஒழிப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு



நூருல் ஹுதா உமர்-
ர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக "போதைவஸ்த்து பாவனை ஒழிப்பு" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது - 09, 16 ஆம் பிரிவு பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக, சாய்ந்தமருது சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம் அவர்களின் நெறிப்படுத்தலில் பொலிவோரியன் கிராம பல்தேவை கட்டிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக கல்முனை பிராந்திய பாலியல் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் என் எம் தில்ஷான் கலந்து கொண்டு போதைப் பாவனையினால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டினார். மேலும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். ஜாபிர், சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :