சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது - 03 ஆம் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையிலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கு பூர்த்தி செய்யப்படாமல் உள்ள வீட்டை பூர்த்தி செய்வதற்காக சாய்ந்தமருது சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் முயற்சியினால் பிரதேச தனவந்தரின் உதவியுடன் 20 சீமெந்து பக்கட்டுகள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இன்று (09) பயனாளியின் வீட்டுக்கு சென்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி தலைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் மற்றும் சாய்ந்தமருது - 03 ஆம் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நபார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment