புகைப்படத்தை காட்டி புலன் விசாரணை கிராம உத்தியோகத்தர் தயானந்த் மாயம்



பெரியகல்லாறு பிரதேசத்தை சேர்ந்த பொதுநல செயற்பாட்டாளர் தம்பியப்பா தயானந்த் ( வயது 39 ) கடந்த வாரம் முதல் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளார்.

கிராம சேவையாளரான இவர் கடந்த தசாப்த காலத்துக்கும் மேலாக பொதுநல செயற்பாடுகள், மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் ஆகியவற்றில் முனைப்புடன் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்கு முறை, பொருளாதார அழுத்தம் ஆகியவற்றுக்கு எதிராக கொழும்பில் கடந்த வருட இறுதியில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களில் இவரும் பங்கேற்றார்.

இதை தொடர்ந்து இவருடைய வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் வந்து உயிர் அச்சுறுத்தல்கள் விடுத்து உள்ளனர் என்று முறைப்பாடுகள் பதிவாகி உள்ளன.
குறிப்பாக இவருடைய புகைப்படத்தை காட்டி அயலவர்கள், நண்பர்கள் போன்றோரிடம் இவரின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள் தொடர்பாக கடந்த நாட்களில் விசாரித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தம்பியப்பா தயானந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :