இன்று சர்வதேச உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பிராந்தியம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதில் ஒரு அங்கமாக இன்று சாய்ந்தமருது கமு/கமு மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் வாய் சுகாதார பரிசோதனைகளும் சிகிச்சைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பிராந்திய வாய் சுகாதார நிபுணர் டாக்டர் எம்.எச்.கே.சரூக் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு பாடசாலை அதிபர் எம்.சி. ரிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் கலந்து கொண்டார்.
மேலும் கௌரவ அதிதியாக பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம் பீ அப்துல் வாஜித் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்ஷாத் காரியப்பர் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத் அவர்களும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம்.என்.எம். மலிக், அவர்களும் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவி பணிப்பாளர் எல்.எம். சாஜித் அவர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் மற்றும் பற்கிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment