நாம் மனிதர்கள் கட்சியின் பொது செயலாளர் ஹாரிஸ் அலி உதுமா லெப்பையின் கையொப்பத்துடன் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு
ஒரு மனிதனின், ஒரு இனத்தின், ஒரு மக்கள் கூட்டத்தின் ஆடை தெரிவை அந்த மனிதன்,அந்த இனம்,அந்த மக்கள் கூட்டமே தீர்மானிக்க வேண்டும் என்பதில் நாம் மனிதர்கள் கட்சி உறுதியுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சாசனத்தை ஏற்று அங்கீகரிக்கிறது.
மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரனோ அல்லது உலமா சபையோ தீர்மானிக்க முடியாது, ஆனால் சுமந்திரன் போன்றவர்களின் கருத்துக்களும், நடவடிக்கைகளும் இவ்விடயத்தில் சர்வதேச மனித உரிமை சாசனத்துக்கு எதிரானவையாக உள்ளன என்பது எமது அவதானம் ஆகும்.
நாம் மனிதர்கள் கட்சி சுமந்திரனை இது தொடர்பாக வன்மையாக கண்டிப்பதுடன் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகளில் யாரும் வெற்றி காண முடியாது என்பதையும் இத்தருணத்தில் அழுத்தமாக சொல்லி வைக்கின்றது.
எனவே சுமந்திரனை மனித குல விரோதியாக நாம் பிரகடனம் செய்து இவரை போன்றவர்கள் உலக வரலாற்றை திருப்பி படிக்க வேண்டும், திரும்பி பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
0 comments :
Post a Comment