சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் அங்கு சென்று நாகவழிபாட்டை முறைப்படி ஆலய தர்மகத்தா சுப்ரமணியம் தியாகராஜா முன்னிலையில் சிறப்பாக நடாத்தினர்.
அத்தருணத்தில் நாகராஜன் வெளியே வந்து தரிசனம் தந்தார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் ஆலோசகர்களான சிவயோகி மகேஸ்வரன் கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட சித்தர்கள் பங்கேற்றனர்.
3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்தகாலத்தில் "வேலோடும் மலை" முருகன் ஆலயம் என்ற ஸ்தாபனம் தோற்றம் பெற்றது.
இது இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டியில் இருந்து 7கிலோமீற்றர் பயணித்து சந்தனமடு ஆற்றை கடந்து வனத்துக்குள் 7 கிலோமீட்டர் பயணித்தால் அடையலாம். அங்கு சித்தர்கள் ரிஷிகள் விட்டு சென்ற எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
இன்றும் மிக சக்தி வாய்ந்த தேவ நாகங்கள் இங்குள்ள சித்தர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கின்றன. நேராக நாகங்களின் தரிசனங்களை, தெய்வீக வாடைகளை உணரலாம். இலங்கை சார்ந்த பல தெய்வ ரகசியங்கள், தேவ ரகசியங்கள் இன்றும் மறைந்திருக்கும் அற்புத மலைத்தொடர். காலம் வரும் போது அனைத்தும் வெளிப்படும் சித்தர்களின் குரல் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி கூறுகிறார்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment