குப்பை நிரப்புத்தளம் ஒன்றை வாங்குமாறு கடந்த 10 வருடங்களாக கூறிவந்தோம் நிதி இல்லை என்றவர்கள் நிலையான வைப்பில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தினைக் கொண்டு பணக்காரர்கள் விளையாடும் புட்சால் உள்ளக விளையாட்டு மைதானத்தை அமைத்தார்கள் அங்கே இலாபத்துக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டது மாறாக மைதானத்துக்குள் குப்பையை கொட்டி விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் நிறைவு பெற்றுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் மேலதிக நீடிப்பு காலம் நிறைவடைந்துள்ளமையினால் சபைகள் அனைத்தும் 19.03.2023 நள்ளிரவுடன் கலைந்துவிட்டது. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் மாநகரசபையின் கடந்த காலத்தை நிதி இல்லை வருமானம் இல்லை என்று மூக்கால் அழுது காலம் கடத்திவிட்டார்கள் இயலாமைக்காரர்கள்.சுயம் இல்லாமல் தந்தையின் உழைப்பில் காலம் கடத்துபவர்களால் எவ்வாறு மக்களை வழிநடாத்த முடியும்.
இவ்வாறுதான் தேசிய காங்கரஸின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களிடம் மைதானதுக்கு அருகில் உள்ள காணிகளுக்கு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் கேட்கின்றார்கள் பணம் கொடுத்து வாங்குவோம் என 2009 களில் கூறும்போது அதிகார போதையில் இருந்த அவர் தனியார்களின் காணிகளை அரசுடமையாக்கி நஷ்டஈடாக 25000 ரூபாவினை வழங்க முற்பட்டார். அதனை காணி சொந்தக்காரர்கள் விரும்பவில்லை ஆனால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குள் காணப்படும் தனது குடும்பத்தார் ஒருத்தரின் ஒரு ஏக்கர் காணியினை பிரதேச சபையின் நிதி 65 இலட்சம் ரூபாவினைக்கொண்டு வாங்க வைத்தார். இது எப்படி என்றால் நம்மவர்கள் கூறுவதுபோன்று உங்கிட உம்மா உம்மா மத்தவங்கட உம்மா சும்மா என்பதுபோல் இருந்தது.
கொரோனா தொற்று தாண்டவம் ஆடிய சுமார் இரண்டுவருட காலப்பகுதியில் மாநகர சபை உறுப்பினர்களை அழைத்து மக்களுக்கு என்ன விதத்தில் களப்பணி செய்யவேண்டும். எவ்வாறான உதவிகள் செய்திட வேண்டும் என கலந்துரையாட ஒரு கூட்டம் ஏனும் கூட்டாத உலகில் ஒரே ஒரு சபை எமது அக்கரைப்பற்று மாநகர சபைதான் என்பதில் வெட்கமடைகின்றேன் எங்களைப்போன்று மக்களும் வேதனைப்பட்டார்கள் என்பதனை நாங்கள் அறிவோம். நமது பிள்ளைகள் எத்தனை நாட்களுக்குத்தான் உள்ளூரில் மாத்திரம் விளையாடுவார்கள் அதனால் தேசியரீதியில் விளையாடக்கூடிய விதத்தில் கடினபந்து விளையாட்டுக்கான பயிற்சிக் கூடாரங்களை அனைத்துபள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அமைக்கமுட்பட்ட போது தடுத்து நிறுத்திவிட்டு இப்போது சகராத் நேரத்தில் மைதானத்துக்கு கதவுபோடும் சிறப்பானவர்களின் காலம் முடிவடைந்துவிட்டது
அக்கரைப்பற்றின் சில பகுதிகள் எங்கள் மாநகர சபை எல்லைக்குள் இல்லை என குடிநீர் இணைப்புக்கான அனுமதியினை வழங்கமறுத்த மாநகர சபைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்தோம் கடைசி நேரத்தில் நீர் இணைப்பை பெறுவதற்கான அனுமதி கடிதத்தை தருகிறோம் வாருங்கள் என கூவி அழைக்கும் ஊழல் குரோதக்கார்களின் பிடியிலிருந்து மக்கள் விடுதலை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment