அக்குரனை அஸ்ஹர் மாதிரி ஆரம்ப பாடசாலையினுடைய 2023 ஆம் ஆண்டின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (17) கண்டி மாவட்ட அக்குரனை பிரதேசத்தில் அமைந்துள்ள அஸ்ஹர் கல்லூரி மைதானத்தில் அதிபர் திருமதி எஸ்.ஏ.எப்.ஜிம்னாஸ் தலைமையில் இடம்பெற்று முடிந்தது...
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபர் எம் எஸ் சனீர் முஹம்மட் கலந்து கொண்டார் மேலும் விசேட அதிதிகளாக அஸ்ஹர் மாதிரி ஆரம்ப பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர்களான திருமதி எம்.இஸட்.எஸ். வஸீலா, என்.எம். சித்தி பரீதா உட்பட இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மூன்று இல்லங்கள் கலந்து கொண்டதோடு லோட்டஸ் இல்லம் 415 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் 433 புள்ளிகளைப் பெற்று ஓக்கிட்டு இல்லம் இரண்டாம் இடத்தினையும் 498 புள்ளிகளைப் பெற்று ரோசஸ் இல்லம் முதலாம் இடத்தினை பெற்று சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி பாடசாலையின் அபிவிருத்தியில் மிக முக்கிய கதாபாத்திரமாக திகழ்வேன் என்று உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment