சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஹதிய்யா பாடசாலைகளை முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவ ஃபிகா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளரும், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளருமான என்.எம்.ஏ.மலிக், சாய்ந்தமருது, ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபதுல் கரீம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூர், அகில இலங்கை ஜமியதுல் உலமா சாய்ந்தமருது கிளைத் தலைவர் எம்.எம்.சலீம், வர்த்தகர் இஸட். எம். அமீன், மாநகர சபை பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் யு.எம்.இஸ்ஹாக், சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஆரிப், நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்களும், அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும், பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்களும், பிரத்தியேக வகுப்பு உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கல்வி மற்றும் மார்க்க கல்வி விடயங்கள் ஆராயப்பட்டதுடன் இனிவரும் காலங்களில் பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாடுகள் மற்றும் ஒழுக்க விடயங்களை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
0 comments :
Post a Comment