கட்டாரில் நடைபெற்ற மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டத்தில் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு.



ட்டார் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டம், மார்ச் 16 வியாழன் மாலை 6 மணிக்கு கஞ்சனி அரங்கத்தில் (ஒருங்கிணைந்த இந்திய கலாச்சாரம் மையம் அல் துமாமா) சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களுக்கான பிரத்யோக போட்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பாக, சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்கும் பொருட்டு "கம்பு" தானியத்தை கொண்டு செய்யபட்ட உணவுகளுக்கான போட்டியும் நடைபெற்றது . மேலும் சாதனைப் பெண்கள், மற்றும் மருத்துவத்துறையில் சேவை செய்த பெண்களை கௌரவித்தல் என பல நிகழ்வுகள் அரங்கேறின.

கட்டார் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் திருமதி.வர்ஷினி கோபால் , திருமதி.சுமா மகேஷ் கவுடா, திருமதி.ஷோபா ராஜ், திருமதி.சந்தியா பிரகாசம் ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து கவுரவிக்கப்பட்டனர். மேலும், சுயதொழில் மற்றும் கல்வியில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினர்.

கட்டார் தமிழர் சங்கத்தின் தலைவர் திரு.மணிபாரதி மற்றும் துணை தலைவர் திரு. சக்திவேல் மகாலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கலாச்சார செயலாளர் கார்த்திகேயன் ,இலக்கியச் செயலாளர் திருமதி லட்சுமி ராமசெல்வம், மற்றும் கலாச்சார இணைச் செயலாளர் & மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி நவீன பிரியா ஆகியோர், ஏனைய நிர்வாகக் குழு மற்றும் துணை நிர்வாகக் குழுவினரையும் ஒருங்கிணைத்து, விழாவை வெகு சிறப்பாக நடத்தி இருத்தனர்.

சமையல் போட்டி, மண்டலா ஓவியப் போட்டி , புகைப்படம் எடுத்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :