கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி, சமூக அபிவிருத்தி பிரிவினால் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (8) இடம்பெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிறைந்துரைச்சேனை 206 சீ சமுர்த்தி மாதிரிக் கிராமத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக வாழைச்சேனை மத்தி உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.ரமீஸா, மாவட்ட செயலக சமூக அபிவிருத்தி முகாமையாளர் புவிதரன், சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.சாதிக்கீன், கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.ஜௌபர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரூசியா பேகம், சீ.ஆர்.பி.ஓ. சபூஸ் பேகம், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப் கான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற இரண்டு பயனாளிகளுக்கு வீடுகள் பூர்த்தி செய்து கையளிக்கப்பட்டதுடன், மேலும் இரண்டு வெற்றியாளர்களுக்கு காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், சமூக அபிவிருத்தி பிரிவினால் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களும் உதவி பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment