அம்பாரை மாவட்டத்தில் உள்ள திருமுறைகளை ஓதும் ஓதுவார்களை ஓன்றிணைப்பதுடன் அவர்கள் தொடா்பான தகவல்களை திரட்டுதல் அவர்களுக்கான அங்கீகாரம்,ஆற்றுப்படுத்தும் வகையில் இவ் நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
முதற்கட்டமாக ஓதுவார்களுக்கான திருவாசகம் நூல் வழங்கிவைக்கப்பட்ட இந்நிகழ்வானது காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. ஆன்மீக அதிதியாக நாவிதன்வெளி ஶ்ரீமூருகன் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சுபாஷ்கர சர்மா,சிறப்பு அதிதிகளாக உதவி கல்விப்பணிப்பிளர்
வி.ரி சகாதேவராஜா,
இராவணா அறக்கட்டளையின் தலைவர் நா.சனாதனன்,சைவப்புலவர் யோ,கஜேந்திரா, புண்ணியமலர் அம்மா, மற்றும் இந்துகலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பங்கு பற்றிய ஓதுவார்களுக்கான திருவாசக நூலினை இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜின் ஏற்பாட்டில் சிவன் தொலைகாட்சியின் சிவன் அடியார் மூலமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment