காரைதீவு மீனவர்களின் தேவைகளை தீர்க்கின்ற முயற்சிகள் முன்னெடுப்பு - கள விஜயம் மேற்கொண்டு ஆய்வு




நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், வருமானம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பான வேலை திட்டங்களை ஆராய்வதற்கு Cross Ethnic Community மனித நேய தொண்டு ஸ்தாபனம் திங்கட்கிழமை காரைதீவுக்கு கள விஜயம் மேற்கொண்டது.

மேற்படி மனித நேய தொண்டு ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சதீஸ் நேரில் வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்தார். அத்துடன் மீனவர்களின் துன்பங்கள், பிரச்சினைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை கவனமாக செவிமடுத்தார்.

முதல் கட்டமாக பயனாளிகளை தெரிவு செய்து மாலை நேர மீன்பிடிக்கான சிறிய ரக தோணிகளை பாவனைக்கு வழங்குவது குறித்து சாதகமாக பரிசீலிப்பதாகவும், கட்டம் கட்டமாக மீனவ உறவுகளின் தேவைகளை நிறைவு செய்து தர முயற்சிப்பதாகவும் இணைப்பாளர் சதீஸ் நிறைவாக தெரிவித்தார்.

Cross Ethnic Community மனித நேய தொண்டு ஸ்தாபனம் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனித நேயத்தை முன்னிறுத்தி சர்வதேச ரீதியாக தேவை உடைய மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றி வருகின்றது.

இன பேதங்களை களைந்து மக்களை இணைப்பது இதன் தூர நோக்கு ஆகும். ஸ்கொட்லாந்தில் ஆபிரிக்கர் மற்றும் ஆசிய மக்கள் குழுக்களை இணைக்கின்ற வேலை திட்டங்களை மும்முரமாக முன்னெடுக்கின்றது.

அதே போல இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உறவு பாலமாக பரிணமிக்கின்ற வகையில் ஏராளமான பல வேலை திட்டங்களை மேற்கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :