ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் தொகுதிக்கான செயற்குழு கூட்டமும், புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வும்



க்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் தொகுதிக்கான செயற்குழு கூட்டமும், புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வும் நேற்று (11) பாலாவி - ஹூஸைனியாபுரத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் ஸல்மான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கலந்துகொண்டார்.

இதன்போது, பாருக் முஹம்மது ராபி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளராகவும், கல்லடிப் பிச்சை முஹம்மது ரபீக் கற்பிட்டி பிரதேச அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இருவருக்கும் நியமனக் கடிதங்களும் கட்சியின் தலைவரினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
மேலும், ஐக்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பாளர் அடையாள அட்டையும் இதன்போது வழங்கப்பட்டன.

அத்துடன், இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும், நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

மேற்படி நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







ஆர்.ரஸ்மின்
ஊடகவியலாளர்
புத்தளம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :