இவ்வாண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்ட முன் மொழிவுகள், கல்வி, சுகாதாரம் உட்பட பிரதேச அபிவிருத்தி சார்ந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் முக்கிய தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
காரைதீவு பிரதேச செயலாளர் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் , பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் பொறுப்பு உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரானபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷாரப் அவர்களின் காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்துக்கான இணைப்பாளர் எனும் வகையில் மாவடிப்பள்ளி பிரதேசம் சார்பாக சில முக்கிய தீர்மானங்கள் மௌலவி அஸாம் அப்துல் அஸீஸ் அவர்களால் முன்மொழியப்பட்டு கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.
அந்த வகையில்
காரைதீவு மற்றும் மாவடிப் பள்ளிக்கு இடைப்பட்ட பிரதான வீதியில் ஒளிராமல் இருக்கும் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுடன் கலந்துரையாடி ஒரு கிழமைக்குள் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவடிப்பள்ளி தபால் அலுவலகத்தை பிரதான வீதிக்கு இடமாற்றி விஸ்தரிப்பு செய்வதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவடிப் பள்ளிக்கான பொது மைதானம் இல்லாத விடயம் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கு பொருத்தமான காணி ஒன்றை சுவீகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவடிப் பள்ளி பிரதேச வைத்திய சாலை பின்னேரம் 5 மணி வரைக்கும் இயங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காரைதீவு பிரதேச அபிவிருத்தி குழு தலைவராக சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment