கடந்த பொதுத் தேர்தல் ஊடாக பாராளுமன்றத்திற்குள் புதிதாக நுழைந்த திரு. சாணக்கியன் அவர்கள் தனக்கு சகலதும் தெரியும் என்ற இறுமாப்போடு நடந்து கொள்வதை தொடர்ந்தும் நாம் கவனித்து வருகின்றோம். சக பாராளுமன்ற உறுப்பினர்களை வசை பாடுவதும், ஒருமையில் பேசுவதையும் வாடிக்கையாக கொண்ட சாணக்கியன் அவர்கள்
தன்னிடம் இனவாத, மதவாத சிந்தனை இல்லையெனவும் இலங்கை வாழ் மக்களுக்காக அதிலும் விசேடமாக தமிழ் பேசும் மக்களுக்காக போராட புதிய அவதாரம் எடுத்தவரைப்போல் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். தமிழ் பேசும் மக்களுடைய பூர்வீக வரலாற்றையும் தேவைகள் என்னவென்பதையும் பரிபூரணமாக தெரிந்து கொள்ளாமல் கிணத்திற்குள் இருந்து கொண்டு உலகை அளந்து விடலாம் என்ற முட்டாள்தனமான நிலைப்பாட்டில் இருந்து அவர் முழுமையாக திரும்ப வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சில விடயங்களை பாராளுமன்றத்தில் பேசிவிட்டார். என்பதற்காக நிகழ்காலத்தில் முஸ்லிம்களின் முதுகில் குத்துவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அண்மையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்யான தகவல்களை பாராளுமன்றத்தில் உரைத்தார். அதன்போதே அவர் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாத ஒருவர் என்பதையும் வேறு ஒரு சக்தியின் நிகழ்ச்சி நிரலில் இயக்குகிறார். என்பதும் தற்சமயம் ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்கு பெயர் மாற்றம் என்பன போன்ற விடயங்களில் தேவையற்ற வாதப் பிரதி வாதங்களை முன்வைப்பது தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தும் முயற்சியாகவே எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனவே இது ஆரோக்கியமான ஒன்றல்ல.
எதிர்காலத்தில் வடகிழக்கை இணைக்கும் டயஸ்போராவின் கைக்கூலியாக செயல்படும் அவருடைய கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையென்ற முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவது கிடையாது. எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment