மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு அரிசி விநியோகம்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

உள்ளுர் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து அதனை பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வழிகாட்டலில் எட்டு கிராம சேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 5802 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக பத்து கிலோ அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எட்டு கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். அல்அமீன், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், உதவி மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :