தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக சமூக பொலிஸ் சேவை குழுக்களுடனான கலந்துரையாடல் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய புலனாய்வு பிரிவு சமூக பொலிஸ் சேவை பிரிவுடன் இணைந்து முதல் தடவையாக நாட்டில் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் இன்று இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச்செயலமர்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் இதன் பிரதான வளவாளராக அரச புலனாய்வு பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.என் ஹேரத் கலந்து கொண்டு வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை வழங்கி வைத்தார்.
குறித்த கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்கஇறக்காமம் பிரதேச செயலாளர் அல்-ஹாபிழ் எம்.எஸ்.எம். றஷ்ஷான் (நளீமி) அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(111) கே.எம்.ஏ.கே பண்டார கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக தேசிய ஔடத அபாயகர கட்டுப்பாட்டு அதிகார சபையின் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம் ரசாட் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சம்மாந்துறை இறக்காமம் காரைதீவு நிந்தவூர் சவளக்கடை பெரிய நீலாவணை மத்தியமுகாம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள் பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் சேவை பிரிவு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலக கிராம சேவை மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோத செயல்களை இல்லாமல் செய்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் சமூக பொலிஸ் சேவை பிரிவின் பங்களிப்பு தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி ஜெயந்த ரத்னாயக்க தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
பொலிஸாரின் அனுமதியுடன் அவர்களின் வழிகாட்டலிலும் கிராம மட்டத்தில் இயங்கிவரும் சமூக பொலிஸ் சேவை பிரிவு உறுப்பினர்களின் நல்ல எண்ணத்துடனும் தியாக மனப்பாங்கோடும் செயற்பட்டால் அர்த்தமில்லாத பிணக்குகளை உண்டாக்கின்ற பாமர மக்கள் பொலிஸ் நிலையத்துக்கோ நீதிமன்றத்துக்கோ செல்கின்ற நிலைமையை கட்டுப்படுத்தலாம் என்றார்.
இங்கு கிராம மட்டத்தில் எவ்வாறு சிறுகுற்றங்களை தடுப்பது போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது எவ்வாறு குற்றச்செயல்களை தடுப்பது சம்பந்தமாக சமூக பொலிஸ் சேவை பிரிவு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இச்செயலமர்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரும் கெப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளருமான ஏ.ஜே.காமில் இம்டாட் நன்றியுரையுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment