கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் ஏ.எம்.எம்.றபீக் கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கல்முனை கல்வி வலயத்திற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை (22) வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் வலயக் கல்வி அலுவலக பணிமனையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் அல்ஹாஜ்.வை.ஹபீபுள்ளா நெறிப்படுத்தினார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், மற்றும் கல்முனைக் கல்வி வலய அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment