சாய்ந்தமருது கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும்



சாய்ந்தமருது கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் நேற்று 2023.03.12 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் எம். சீ. நஸ்லின் றிப்கா அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல். எம். தன்சில் அவர்களின் ஒருங்கமைப்பில் கூட்டப மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்துக்கு அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் என். எம். மலிக் மற்றும் இப் பாடசாலையின் பழைய மாணவரும் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. எல். எம் சலீம் மற்றும் இப் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் உரையாற்றுகையில் இப்ப பாடசாலையின் வளங்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பாடசாலையில் காணப்படும் குறை நிறைகள் மற்றும் இப் பாடசாலையில் இதுவரை காலமும் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்படாத பற்றியும் இவ் வருடம் பழைய மாணவர் சங்கத்தை அமைத்து பாடசாலையின் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பழைய மாணவர் சங்கத்தின் உதவிகளை பெறுவதற்கு தான் எண்ணி உள்ளதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதி அதிபர் ஏ எல் எம். தன்சில் அவர்களால் பாடசாலையில் கல்வி மற்றும் பௌதிக சுற்றுசூழல் கடந்த கால மாணவர்கள் அடைவு மட்டம் எதிர் கால திட்டம் தற்போதைய நிலை போண்ற வற்றை திரை மூலமாக வெளிச்சம் போட்டு காட்டினார்.
பின்னர் அதிதியாக வந்த முன்னாள் பிரதேச செயலாளர் தற்போதைய பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல். எம். சலீம் உரையாற்றினார் தொடர்ந்து கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.எம். மலிக் உரையாற்றுகையில் இப்பாடசாலையை மிக விரைவில் தரம் உயர்த்தி தருவதாக கூறினார்.
வருகை தந்த பழைய மாணவர்கள் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பின்வருவோர் பழைய மாணவர் சங்கத்தின் நிருவாகக் குழுவுக்காக தெரிவு செய்யப்பட்டனர் .
1. தலைவர் - M.C. Nasleen Rifka
2. உப தலைவர் - M.T.M. Nowzath
3. செயலாளர் - A.M. Jahan
4. உப செயலாளர் - A. Gafoor Anwar
5. இணைப்பு செயலாளர்- A.H. Mursith
6. பொருளாளர் - A.A. Fawreej Yoonus
7. உப பொருளாளர் - S. Fasloon
8. இணைப்பு பொருளாளர் - A.G. Ashar
9. கணக்காய்வாளர் - A.M. Naleer
10. ஊடக இணைப்பாளர் - N.M.M. Siraj
நிருவாகக் குழு உறுப்பினர்கள் -
K.M. Irfan
A.A.M.A. Sifnas
M.H.M. Tharik
R.M. Ranees
N.M. Sajan
A.M. Sajahan
A.L.Faheem
A.M. Lafeer
A. Ajmeer
J.M. Imthiyas
S.M. Iliyas
S. Fasmeer
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :