கிழக்கின் தென்கோடியில் உள்ள குமண பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அதிகாரி பி.சமரநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் முன்னிலையில், குமுக்கன் ஆற்றங்கரை மஹாகாளி தேவி சந்நிதியில், உலக சேமம் கருதி இடம் பெற்ற மாபெரும் நான்காவது சண்டி ஹோமத்தின்போது இக் கௌரவம் வழங்கப் பட்டது.
சண்டிஹோம வேள்வி கிரியைகளை நடாத்திய இலங்கையின் பிரபல இணுவில் தர்ம சாஸ்தா குருகுல வேத வாத்தியார் சிவஸ்ரீ வத்சாங்க குருக்கள் முன்னிலையில், வனத்துறை அதிகாரிக்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்கியமைக்காக, சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அவ்வமயம், சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், ,உப தலைவர் மனோகரன், நமசிவாய மகேஸ்வரன் சுவாமி , ஸ்ரீ சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment