கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை பிரதியதிபர் ஏ.எம். நளீம் அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த பொறியலாளர் ஐ.எல்.எம். நிப்ராஸின் மூலம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட இந்த பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம். ஹஸீப், பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பின் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றலின் அவசியம் தொடர்பிலும், பாடசாலை கல்வி மேம்பாடுகள், கற்றலுக்கு உதவி செய்வோருக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் வழங்கவேண்டிய மரியாதைகள் தொடர்பிலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் தொடர்பிலும் உரை நிகழ்த்தினர்.
காரைதீவு கல்வி கோட்டத்தில் கடந்த காலங்களில் பிரகாசித்த மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயம் மேலும் இனிவரும் காலங்களிலும் பிரகாசிக்க தேவையான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் உரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலும் உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்த பொறியலாளர் ஐ.எல்.எம். நிப்ராஸ் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கும் நேற்று கணனி தொழிநுட்ப அறையொன்றை ஸ்தாபித்து கொடுத்திருந்ததுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கான உதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment