கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால் சம்மாந்துறை இர்ஷாதியா இஸ்லாமியா கலாபீடத்தில் பொதுக்கிணறு திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை இர்ஷாதியா இஸ்லாமியா கலாபீடத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவிகளின் நலன் கருதி குறித்த கலாபீட நிர்வாகத்தினர்கள் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிடம் பொதுக்கிணறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய YWMA பேரவையின்அனுசரணையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூரினால்,குறுகிய நாட்களுக்குள் பொதுக்கிணறு அமைக்கப்பட்ட நிலையில் இதனை உத்தியோகபூர்வமாக திறந்து கலாபீட நிர்வாகிகளிடம் கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன்உறுப்பினர்களுடன் கலாபீடத் தலைவர் அல்-ஹாபிழ் மெளலவி எம்.எச்.ஹம்ஸா,அல்-அக்ஷா பள்ளிவாசல் இமாம் ஏ.சிறாஷ்,அல்-ஹாபிழ் ஏ.ஆர்.எம்.இர்பான் மற்றும் கலாபீட நிர்வாகிகள், உலமாக்கள்,மாணவிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment