மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டனில்


லையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
.
மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திர்ரேக்கா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக " வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்" ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை ) எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்ற உள்ளார். கோகிலம் சுப்பையா அவர்களின் சமூக - இலக்கிய வாழ்க்கைக் குறித்த குறிப்பையும் உரையாளர் பற்றிய அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்குவார். உரையைத் தொடர்ந்து இடம்பெறும் உரையாடல் அரங்கத்தையும் அவரே நெறிப்படுத்த உள்ளார். அடையாளம் காணப்பட்ட பெண் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. நன்றியுரையை மலையகப் பெண்கள் அரங்கத்தின் செயலாளர் இதயஜோதி வழங்குவதுடன் நிகழ்ச்சிகளை நிஷாந்தினி சரவணகுமார் தொகுத்தளிக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :