கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களில் கல்முனை மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூர் வீதிகளையும் ஒழுங்கை களையும் ஆக்கிரமித்து நிர்மானிக்கப்படும் இப்புதிய கட்டட நிர்மானங்களால் வீதிகள் ஒடுக்கப்பட்டு பொதுமக்களும் வாகனங்களும் பயணிப்பதற்கு மிகவும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
சில கட்டடங்கள் மின்கம்பம் மற்றும் தொலைபேசி கம்பம் நடப்பட்டிருக்கும் எல்லையையும் தாண்டி நிர்மானிக்கப்படுகின்றன.
சிலர் தொலைபேசிக்கம்பத்தையும் மின்கம்பத்தையும் வைத்தே வீடு கட்டியுள்ளனர்.
வீட்டுக்கு படி கட்டி படிக்கு மதில் கட்டி வடிகான்களுக்கு மேலால் வீட்டின் எல்லை மீறி வந்துள்ளது
.
இதற்கு மேலதிகமாக சுவரின் கதவை வீதிப்பக்கமாக திறந்தும் வைத்துள்ளனர்.
கட்டட நிர்மாண பொருட்களும் வீட்டு இடிபாடுகளும் பல மாதங்களாக வீதியில் குவிந்து காணப்படுவதால் அடிக்கடி வீதி விபத்துக்களும் ஏற்படுகிறது.
இந்த விடயத்தில் கல்முனை மாநகரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பெரிய வீதிகள் ஒடுங்கி ஓடையாவதனை எவராலும் தடுக்க முடியாது.
0 comments :
Post a Comment