பிரசித்தி பெற்ற மருதமுனை அல்- மனாரின் அதிபராக உபைதுல்லாஹ் நியமிக்கப்படவுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது : கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம்



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாணம், கல்முனை கல்வி வலயத்திலுள்ள பிரபலமிக்க சிரேஷ்ட பாடசாலைகளில் ஒன்றான மருதமுனையின் முதற்பாடசாலை அல்- மனார் மத்திய கல்லூரியின் அதிபர் பதவியிலிருந்து இப்போதைய அதிபர் ஏ.ஜே. அப்துல் ஹஸீப் அவர்கள் ஓய்வுபெறவுள்ளதால் அந்த இடத்திற்கு பொருத்தமானதாக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பலரும் வலயக்கல்வி பணிப்பாளர் என்ற வகையில் என்னுடன் பேசியதிலிருந்து பொருத்தமானவராக பலராலும் அடையாளம் காட்டப்பட்டவர்தான் மருதமுனை அல்- ஹம்றா வித்தியாலயத்தை சிறப்பாக நிர்வாகித்த ஐ. உபைதுல்லாஹ் அவர்கள். இப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்கும் வகையில் கல்வியமைச்சினால் இப்பாடசாலைக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்தார்.

மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரில் தமது கடமைகளை கடந்த வியாழக்கிழமை மாலை பெறுப்பேற்ற ஐ. உபைதுல்லாஹ் அவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகப்பணி காரணமாக அமைச்சில் இருந்த என்னை செயலாளர் நேரடியாக அழைத்து இவ்வதிபர் நியமனம் தொடர்பிலும் அல்- மனார் மற்றும் அல்- ஹம்றா ஆகிய பாடசாலைகளினதும் தற்போதைய நிலைப்பாடுகளை கேட்டறிந்து இவரது நியமனம் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளருடன் ஆழமாக கலந்தாலோசிக்கப்பட்டு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இப்போதைய சூழ்நிலையின் போக்கை கவனத்தில் கொண்டு உபைதுல்லாஹ் அவர்களுக்கான கடிதத்தை வழங்கியுள்ளார். இந்த கடிதத்தை தழுவியதாக அடுத்தமாதம் ஏழாம் திகதி இப்பாடசாலையின் அதிபராக உபைதுல்லாஹ் அவர்களை பெறுப்பேற்கும் விதமாக வலயக்கல்வி பணிப்பாளராகிய என்னாலும் ஒரு கடிதம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

இவருக்கான இந்த கடிதத்தை பெறுவதற்காக இப்பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பின் முன்னாள் செயலாளர் எம்.ஐ.எம். வலீத் அவர்கள் கல்வியமைச்சின் செயலாளரை நேரடியாக அணுகி நியமனப்பணிக்கான வேலைகளை இலகுபடுத்தியிருந்தார். இப்பாடசாலைக்கான அதிபர் வெற்றிடம் உருவாகவுள்ள விடயத்தை வலயக்கல்வி பணிப்பாளர் என்ற வகையில் உரியமுறையில் மாகாண அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறேன். இவற்றுக்கு இடையில் மாணவர்களின் நலன் கருதி, பாடசாலையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு சிரேஷ்ட தரத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற எல்லோருடைய எதிர்பார்ப்பும் உபைதுல்லாஹ்வின் நியமனத்தின் மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த காலங்களில் மருதமுனை அல்-ஹம்ராவின் முன்னேற்றத்தில் அவர் செலுத்திய கரிசனைக்கு ஒப்பான கரிசனையை அல்-மனாரிலும் செலுத்தி அல்- மனாரை சிறந்த நிலைக்கு உயர்த்திசெல்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இப்பாடசாலையை தனது சேவை காலத்தில் சிறப்பாக செய்த அதிபர் ஏ.ஜே. அப்துல் ஹஸீப் அவர்கள் பாராட்டுக்குரியவர். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள அதிபருக்கு பாடசாலை முகாமைத்துவ குழு, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களுடன் இணைந்து வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :