நீச்சல் வீரர்களுக்கு சான்ளிதழ்கள் வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
UN SDG14 "Life Below Water" என்ற இலக்கின் அடிப்படையில் 19.03.2023 அன்று Trinco Aid இன் ஏற்பாட்டில் Yana Foundation (swimming Academy) இல் பயிற்சி மாணவர்களை கொண்டு திருகோணமலை நகர கடல் ஆழ்பகுதி, கரைப்பகுதிகள் சுத்தமாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Vanni Hope நிறுவனத்தின் நிதி உதவியில் இன்று (26) திருகோணமலை மக்கேய்சர் உள்ளரங்க நீச்சல் தடாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இன் நிகழ்விற்கு பிரதம விருந்தனராகக் திருமதி. மைதிலி சேகரன் (Deputy Director of Education Trincomalee) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. முஹம்மட் பாரிஸ் ( Vanni Hope Director - Sri Lanka Office), திருமதி. தயாளினி ஹரிகரன் ( Trinco Aid Director), திரு. நந்தன விஜயலால் (Yana Foundation Director) ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். அத்தோடு இன் நிகழ்வினை சிறந்த முறையில் Trinco Aid இன் நிறுவனர், நிகழ்ச்சி முகாமையாளர் ஆகியோரால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் மாணவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இது போன்ற திட்டங்களை எதிர்காலத்தில் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களும் நடைபெற்றது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :